Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
அமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்

SooriyanFM Gossip - அமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

159 Views
அமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய நகரத்தில் 84 வயதுடைய எல்சி எய்லர் எனும் மூதாட்டி மட்டுமே தனியாக வாழ்ந்து வருகின்றமை, ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தனியாக அந்த சிறிய நகரத்தில் வசிப்பது தொடர்பாக எல்சி எய்லரிடம் வினவியபோது, இங்கு இருந்தவர்கள் இடம் பெயர்ந்து சென்று விட்ட நிலையில் இப்பகுதியில் நான் மட்டுமே வசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எனது பெற்றோர் இந்த நகரத்திற்கு அப்பால் உள்ள விவசாய நிலப்பகுதியில் பணிகளை மேற்கொள்ள சென்றனர். எனக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். நான் இங்கு இருப்பதையே விரும்புகிறேன் என்பதை எனது பிள்ளைகள் இருவரும் உணர்ந்தனர். மேலும் 1971 முதல் Coffee , டீ போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். இந்த கடையை நான் திறந்த போது , இப்பகுதியில் இருந்த தபால் நிலையமும், சிறிய மளிகை கடையும் மூடப்பட்டது.

ஆனாலும் இந்தப்பகுதியில் உள்ள வீதியின் வழியே செல்லும் பல டிரக்குகள், வியாபாரிகள், ஆகியோர் தற்போது எனது கடையின் வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர். மேலும் இயற்கையுடன் கூடிய அமைதியுடன் இந்தப் பகுதி இருப்பதால் எனது கடைக்கு வருபவர்கள் இந்த பகுதியை மிகவும் நேசிக்கின்றார்கள். இதனால் எனக்கானவாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி கூடுதல் பொறுப்பாக எந்தவித போட்டியுமின்றி இந்த பகுதியின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

எனக்கு 84 வயதாகிறது. இந்நிலையில் என்னை பார்ப்பதற்காகவே சிலர் வருகின்றனர். தனிமையில் இருந்தாலும், நான் எவ்வித மன வருத்தமும் இன்றி இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று அந்தப் பாட்டி தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top