அனைவரது மனதையும் கவர்ந்த நடிகரென்றால் அது சிவகார்த்திகேயன் இன்று சிவாவின் 34 வது பிறந்தநாள்
அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளர் அனிருத் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல்லூரி விழாவில் நான் கீபோர்டு வாசித்தபோது சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்... என்று ட்வீட் செய்துள்ளார் அனிருத்.
பழைய விஷயத்தை நினைவூகூர்ந்ததுடன் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பற்றி அனிருத் போட்ட ட்வீட்டை பார்த்த தனுஷ் ரசிகர்களோ உங்கள் திறமையை கண்டுபிடித்து வளர்த்துவிட்டதே எங்க அண்ணன் தானே என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிவகார்த்திகேயனுக்கு அஜித், விஜய், சூர்யா, ஜெயம் ரவி, மகேஷ் பாபு ஆகியோரின் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிவா நயன் இருவரின் நடிப்பில் வெளிவரவுள்ள படம் Mr .லோக்கல் படத்தின் டீசரை பட குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.