Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
18
அதிதி மேனன் - அபி சரவணன் விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது

SooriyanFM Gossip - அதிதி மேனன் - அபி சரவணன் விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

165 Views
நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர் அபி சரவணன், போலியாகத் திருமணப் பதிவுச் சான்றிதழ் தயாரித்து அவதூறு பரப்பி மிரட்டி வருவதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "பட்டதாரி" என்ற திரைப்படத்தில் அதிதி மேனன், அபி சரவணன் சேர்ந்து நடித்தனர்.

இதன்போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இது இவ்வாறு இருக்க, தனது மின்னஞ்சலை ஹேக் செய்து ஆவணங்களைத் திருடி, தன்னை அபி சரவணன் திருமணம் செய்து கொண்டது போல் போலியாக திருமணப் பதிவுச் சான்றிதழ் தயாரித்து தன்னை பயமுறுத்தி வருவதாக சென்னை பெருநகர் காவலாணையர் அலுவலகத்தில் அதிதி மேனன் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனிடையே முன்னதாக, வளசரவாக்கக் காவல்நிலையத்தில் தன்னுடன் மனைவியாக ஒரே விட்டில் வாழ்ந்து விட்டு அங்கிருந்த நகை, பணத்தை அதிதி மேனன் எடுத்துச் சென்றுவிட்டதாக அபி சரவணன் முறைப்பாடு பதிவு செய்த்திருந்தார். இந்த முறைப்பாட்டின் பின்னர் கருத்து தெரிவித்த அதிதி மேனன், இருவரும் காதலித்தது உண்மைதான் ஆனால் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழவில்லை என்று மறுத்துள்ளார். மேலும் இதற்கு முன்னால் அபி சரவணனால் ஏமாற்றப்பட்ட பலரும் தன்னை ஆதாரத்துடன் எச்சரித்ததாகவும் அதனால் அவரை விட்டுப் பிரிந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

இது மாத்திரமின்றி, 7 மாதங்களுக்கு முன்பு, தன் வீட்டுக்கு அடாவடியாக வந்த அபி சரவணன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆனால் அவரது பெற்றோர் வந்து மன்னிப்புக் கேட்டதால் தான் இது குறித்து காவல் நிலையத்தில் எந்தவொரு முறைப்பாடு அளிக்கவில்லை என்றும் அதிதி தெரிவித்தார். இந்த நிலையில், சினிமாவில் தனது வளர்ச்சி பொறுக்க முடியாமல் அபி சரவணன் தனக்கு இப்படித் தொல்லை கொடுக்கிறார் என்றும் அதிதி மேனன் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top