Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
20
தனது பிள்ளைகளைக் கொன்று விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!

SooriyanFM Gossip - தனது பிள்ளைகளைக் கொன்று விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,534 Views
இந்தியாவின் கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த  மதிவாணன் என்ற 48 வயதான நபர், மருந்து பொருட்கள் விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்துள்ளார்.  

இவர் சிவசங்கரி என்ற பெண்ணை, திருமணம் செய்ததை அடுத்து இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் சிவசங்கரி, வீட்டில் தனது பிள்ளைகளுடன் இருந்த போது, திடீரென்று அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தனது மகன்களை காப்பாற்ற எவரும் இல்லை என நினைத்த சிவசங்கரி, தனது இரு குழந்தைகளையும் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இறுதியாக தனது மகன்களை முத்தமிட்டு கொஞ்சிய சிவசங்கரி, அவர்களுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்து கொலை செய்து விட்டு, பின்னர் கண்ணீர் மல்கினார். சிறிது நேரம் கழித்தும், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மதிவாணன், கதவை தட்டிப் பார்த்தார். இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. மனைவியின் அலைபேசிக்கு அழைத்த போதும், எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து பதறிபோன மதிவாணன், தனது நண்பரை அழைத்தார். அவர் வந்தவுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

வீட்டில் உள்ள ஒரு அறையில் சிவசங்கரி தூக்கில் பிணமாக தொங்கினார். அவருக்கு கீழே மகன்கள் பாவேஷ்கண்ணா, ரபிஷ்கண்ணா ஆகியோர் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து மதிவாணன் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். இறந்து கிடந்த 3 பேரின் உடல்களை பார்த்து அதிர்ந்தே போனார்கள்.

இதனை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், உடலங்களை மீட்டதுடன், இது குறித்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top