Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
22
உலகின் மிகச்சிறிய நாடு!

SooriyanFM Gossip - உலகின் மிகச்சிறிய நாடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,531 Views
உலகின் மிகச் சிறிய நாடான சீலேண்ட், கடல் மேலே உள்ள கட்டிடமொன்றில்  உள்ளது என்றால், நீங்கள் அனைவரும்  ஆச்சரியமடைவீர்கள். ஆனால் இது உண்மை. பிரித்தானியாவின்  வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில்13 கிலோ மீற்றர்  தொலைவில் உள்ளது இக்குட்டி நாடு. 

இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த போது 1942ல் பிரித்தானிய அரசு கடலில், இரும்பால் வலுவான ஒரு குட்டித் துறைமுகத்தைக் கட்டியது. போரில் பயன்படுத்தப்படும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இத் துறைமுகத்தை பயன்படுத்தினர். போர் முடிந்த பின், 'ரப் டவர்' எனப் பெயரிடப்பட்டு, 1956- வரை இத் துறைமுகத்தை பிரித்தானியர் பயன்படுத்தினர். காலப்போக்கில் அப்படியே விட்டுவிட்டனர்.

முன்னாள் ராணுவ அதிகாரியான ராய் பெட்ஸ் தன் குடும்பத்துடன் 1967ல் இங்கு வந்து தங்கியவர், இந்த இடத்திற்கு ப்ரின்சிபாலிட்டி ஒப் சீலன்ட் (principality of Sealand ) என்று பெயர் வைத்தார்.

பிரித்தானிய அதிகாரிகள் சீலண்டில் இருந்து ராய் பெட்ஸை அப்புறப்படுத்த எவ்வளவோ முயன்றனர். அவர் பிடிவாதமாக வெளியேற மறுத்தார். அதனால், இவ்வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது.ஆனால், இந்த குட்டி துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறி விட்டது. இதன் பிறகே, ராய் பெட்ஸ் 1975-ல் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார்.

இந்த நாட்டுக்கென கொடி, தேசியக் கீதம், பணம், கடவுசீட்டு, என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அனைத்தையும் பெட்ஸ் அறிமுகப்படுத்தினார்.ஒரு முறை ராய் பெட்ஸ் தன் குடும்பத்தாருடன் இங்கிலாந்து சென்றிருந்த போது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்நாட்டை ஆக்கிரமித்தனர். பெட்ஸ் மற்றும் அவரது மகன் மைக்கலும் அவர்களுடன் போரிட்டு இந்நாட்டை மீட்டனர்.

பிரித்தானிய அரசு 1987 ல் கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீற்றராக அதிகரித்து, சீலேண்டை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயன்றது. ஆனாலும் முடியவில்லை.சீலேண்டின் இளவரசராக தன்னை அறிவித்துக் கொண்ட ராய் பெட்ஸ், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

தற்போது இக்குட்டி நாட்டிற்கு பெட்ஸ் மகன் மைக்கல் இளவரசராக பதவி வகிக்கிறார். இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இக்குட்டி நாட்டில் வசிக்கின்றனர். இந்த கட்டடத்தில் 30 அறைகள் உள்ளன. இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் கடவுசீட்டு , விசா எடுத்து வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top