ஈக்வடோர் நாட்டின் தீவுப் பகுதியில், ஒரு அரிய வகை ராட்சத ஆமையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆமைக்கு 100 வயதிற்கும் அதிகம் என கணிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஆய்வாளர்கள் இந்தப் பெண் ஆமையை, இனப் பெருக்கத்திற்காக கொண்டு சென்றுள்ளனர்.
சுமார் 225 கிலோ எடை கொண்ட இந்த ராட்சத ஆமைகள் நூறு ஆண்டுகளை தாண்டியும் உயிர் வாழக்கூடியவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.