Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
23
ஒப்பந்தமான இரண்டு படங்களில் இருந்தும், ராகுல் பிரீத் சிங், நீக்கப்பட்டார் - காரணம் இதுதான்

SooriyanFM Gossip - ஒப்பந்தமான இரண்டு படங்களில் இருந்தும், ராகுல் பிரீத் சிங், நீக்கப்பட்டார் - காரணம் இதுதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,128 Views
எதிர்பார்த்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டதால், நடிகை ராகுல் பிரீத் சிங் ஒப்பந்தமான 2 படங்களில் இருந்து  நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில், இளம் நடிகையாக ஜொலிப்பவர் நடிகை ராகுல் பிரீத் சிங். அண்மையில் கார்த்தி ஜோடியாக நடித்த தேவ் படம் திரைக்கு வந்தது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்த என்.ஜி.கே படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த அத்துடன் நடிகர் சிவகார்த்திகேயன் படத்திலும் இவர் ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன் 2 இந்தி படங்களும் இவர் கைவசம் உள்ளன.

இந்த நிலையில் அண்மைக்காலமாக ராகுல் பிரீத் சிங் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஏற்கனவே ஒப்பந்தமான 2 படங்களில் இருந்து இவரை படக்குழு நீக்கி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழில் விஷ்ணு விஷால் - அமலாபால் ஜோடியாக நடித்து வெற்றி பெற்ற ராட்சசன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.

இதில் பெல்லம் கொண்டா சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க ராகுல் பிரீத் சிங்கை ஒப்பந்தம் செய்தனர். எனினும் திடீரென்று அவரை நீக்கி விட்டு, ராஷிகன்னாவிடம் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. படத்திற்கு அதிக சம்பளம் கேட்டதால், ராகுல் பிரீத் சிங்கை நீக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாக சைதன்யா நடிக்கும் வெங்கி மாமா படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ராகுல் பிரீத் சிங்கை ஒப்பந்தம் முன்னர் ஒப்பந்தம் செய்திருந்தனர். எனினும் இப்போது அந்த படத்தில் இருந்தும், அவரை நீக்கி விட்டு நபா நடேஷை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நடிகை ராகுல் பிரீத் சிங் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக தெரிய வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top