Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
23
நடிகை விஜயலட்சுமி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

SooriyanFM Gossip - நடிகை விஜயலட்சுமி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

583 Views
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பைக் கொண்டு, பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சின்னத்திரையிலும் பிரவேசித்து, தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

பல வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர், தமிழில் பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்து அசத்தியவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாககவும் இவர் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயலட்சுமி, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் , அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து நடிகை விஜயலட்சுமியின் சகோதரி கருத்து வெளியிடும் போது, '‘விஜயலட்சுமிக்கு நேற்று ரத்த அழுத்தம் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்த பணத்தை எல்லாம் எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்து விட்டோம். தற்போது மிகுந்த பொருளாதார சிக்கலில் உள்ளோம். விஜயலட்சுமியின் சிகிச்சைக்கு சினிமா துறையினர் உதவ வேண்டும் என, தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்'' என குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு உதவி இயக்குனர் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியமையால், அவர் தற்கொலைக்கு முயன்றதாக பேசப்பட்டது.

இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்த விஜயலட்சமி, ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். அந்த திருமணம் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்து இருக்க வேண்டியது. ஆனால் திடீர் என்று அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் விஜயலட்சுமி வெளியில் வருவதையே குறைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top