Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
08
பார் போற்றும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

SooriyanFM Gossip - பார் போற்றும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

179 Views
மனைவியாக தாயாக தோழியாக காதலியாக சகோதரியாக நம் அன்றாட வாழ்க்கையில் பங்கு கொள்ளும் பெண்கள் பிரம்மிக்கத்தக்கவர்கள், மதிக்கத்தக்கவர்கள்.ஒரு பெண் இல்லாமல் நம் வாழ்வு முழுமை பெறும் என்று நினைத்தால் அது தவறு.அவ்வாறு நடக்க எப்போதும் வாய்ப்பிருக்காது.ஏதோ ஒரு பதவியில் பெண்கள் நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள்.
இவ்வாறான பெண்களை மதிக்கும் விதமாக, போற்றும் விதமாக அமைந்த இன்றைய நாள் மகளிருக்கானது.

ஆண்களால் மட்டும் தான் முடியும் ,தலைமைத்துவமும் வலிமையும் எதிர்த்து போட்டியிடும் திறமையும் பக்குவமாக ஒரு விடயத்தை சாதிக்கும் வழிமுறையும் ஆண்களால் மட்டும் தான் முடியும் என்ற வார்த்தையை தகர்த்தெறிந்து ,பெண்கள் இப்போது அனைத்து துறையிலும் மேம்பட்ட ரீதியில் ஆதிக்கம் செலுத்தி ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்தான் இருக்கின்றாள் என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கும் வகையில் பெண்கள் உயர்ந்துவிட்டார்கள்.

சர்வதேச மகளிர் தினமானது மார்ச் மாதம் 8 ம் திகதி கொண்டாடப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்தது.ஆனால் இதன் வரலாறு பலர் அறிந்திடாதது.கொஞ்சம் இதன் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.

பெண்களை அடிமையாக நடத்துதல் ,இழிவு படுத்துதல்,பெண்ணாக மதிக்காமல் நடத்துதல்,தங்கள் இச்சைக்காக மட்டும் பயன்படுத்தல்,சம உரிமையின்மை ,அவர்களை முக்கியமான நேரத்தில், இடத்தில், சம்பவங்களில் ஒதுக்குதல் போன்ற செயற்பாட்டின் உச்சகட்ட போராட்டத்தில் உதித்ததுதான் இந்த சர்வதேச மகளிர் தினம்.1913 ஆம் வருடம் தொடக்கம் மார்ச் 8 ம் திகதி சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுவதும் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

மகளிரை போற்றும் செயற்பாட்டை தாண்டியும் இன்னொரு பக்கம் பெண்களை பாலியல் வல்லுணர்வுக்கு உட்படுத்தும் செயற்பாடு ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.பெண்களோடு பிறந்தவர்கள் நாங்கள் என்பதை நினைவில் கொண்டு பழகும் விதங்களை நேர்படுத்திக்கொண்டு பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திடுங்கள்.

ராணியாக வாழும் ஒவ்வொரு பெண்ணும் உங்களை ராஜாவாக்கிக்கொண்டிருக்கின்றாள் என்பதை உணர்ந்திடுங்கள்.

ஐக்கிய நாடுகள் சபையானது 2030ம் ஆண்டிற்குள் பெண்கள் முன்றேற்றத்தில் மாற்றமொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.அதில் சிறுமிகளின் சுதந்திரம்,பெண்களுக்கான தரமான சிறந்த கல்வி,பெண்களுக்கெதிரான இனபாகுபாடு ஒழிப்பு,பாலியல் ரீதியான வன்முறை, அத்துமீறல், கொடூர செயல் ஒழிப்பு ,குழந்தை திருமணம், கட்டாய திருமணம் தொடர்பில் நடவடிக்கை போன்றவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.

மகளிர் தினத்திற்கு உதாரணம் சொல்லும் திறமை வலிமை நிறைந்த 
பெண்களை தாண்டி, நம் வீட்டிலும் பெயர் சொல்லி வாழ்த்தப்படாத பெண்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்திடுங்கள்.

பெண்களை மதித்து போற்றுவோம் , வாழ்த்துவோம் .மகளிர் தின வாழ்த்துக்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top