அமெரிக்காவில் வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை ஒரு பெண் பிரசவித்துள்ளார்.
அங்குள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்தவர் பெண் தெல்மா சயாகா. இவர் பிரசவத்துக்காக டெக்சாசில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். காலை 4.50 மணி முதல் 4.59 மணிக்குள் அதாவது வெறும் 9 நிமிட இடைவெளியில் 6 குழந்தைகளை தெல்மா சயாகா பிரசவித்துளார்.
அவற்றில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு குழந்தையும் தலா 480 கிராம் முதல் 950 கிராம் நிறையுடன் பிறந்துள்ளன. 6 குழந்தைகளை அவர் பெற்றபோதிலும் குழந்தைகளும், தாயும் ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றார்கள். எவ்வாறானபோதிலும் குழந்தைகள் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 470 கோடியில் ஒரு பெண்ணுக்கு தான் இதுபோன்று குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த சாதனையை தெல்மா முறியடித்து உள்ளார். இவர் தனது பெண் குழந்தைகளுக்கு ஷினா, ஷீரியல் என பெயரிட்டுள்ள நிலையில், ஏனைய 4 ஆண் குழந்தைகளுக்கும் பொருத்தமான பெயரை தேடிக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.