தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரைக்கும் அதிக படங்களில் நடித்திருக்காவிட்டாலும் ரசிகர்களின் கனவில் தோன்றும் அளவுக்கு உள்ளங்களை தன் அழகால் கொள்ளை கொண்டவர் கேரளத்து இளம் சிட்டு நடிகை பாவனா.
ஜெயம் ரவியுடன் நடித்த "தீபாவளி" திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் பெரியதொரு இடம் பிடித்திருந்த நடிகை பாவனா, "சித்திரம் பேசுதடி", "ஜெயம் கொண்டான்" போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருந்ததோடு, நடிகர் மாதவன் நடித்த "ஆர்யா" படத்தில் வைகைப்புயல் வடிவேலுவை வைத்து வதைக்கும் காட்சியை எப்போது பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை. அத்துடன், 2010ம் ஆண்டு 'தல' அஜித் ஜோடியாக "அசல் " திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் முன்னணி நட்சத்திரத்துடன் நடித்த பெருமையையும் பெற்றிருந்தார் நடிகை பாவனா.
தமிழில் தனக்கான இடத்தை தக்கவைப்பதற்கு முயன்ற நடிகை பாவனாவுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காதமையால், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் அவரது கவனம் திரும்பியது. அந்த வேளையில் தான், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட பாவனா பாலியல் வன்முறை கொடுமைக்கும் முகம்கொடுக்க நேர்ந்த நிலையில், கடந்த ஆண்டு தனது நண்பரும், கன்னடத் திரைப்பட தயாரிப்பாளருமான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இது இப்படியிருக்க, திரையுலகில் கதாநாயகிகளாக நடித்த நடித்த நடிகைகள் பெரும்பாலும் தமது உடல் தோற்றத்தை எப்போதும் கட்டுக்கோப்பாகவும், அழகாகவும், மெல்லியதாகவும் வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டுவதுடன், கொஞ்சம் அதிகம் எடை கூடி பருமனான உடல் தோற்றம் வந்துவிட்டாலும் அப்படியான புகைப்படங்களை வெளியிடவோ அல்லது அதே தோற்றத்தில் பொது வெளியில் நடைபெறும் விழாக்களில் பங்கெடுக்கவோ விரும்புவதில்லை. ஆனால், நடிகை பாவனா இப்படியான மனநிலையிலிருந்து மாறுபட்டவராக உள்ளார் என்று பெருமைப்படுகின்றனர் அவரது ரசிகர்கள்.
கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளரான நவீனை திருமணம் செய்து கொண்டதன் பின்னர் மலையாள படங்களில் நடிப்பதையும் கைவிட்டு கன்னடப் படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கும் பாவனா, இந்த ஆண்டில் 2 கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி மற்றும் திரிஷா நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற "96" திரைப்படத்தின் கன்னட மீளுருவாக்கமான "99" படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கின்றார்.
அதேவேளை, காதலித்துக் கரம் பிடித்த திருமண வாழ்க்கை சந்தோசமாக அமைந்ததால், மெல்லிய அழகிய தோற்றத்திலிருந்து தற்போது கொஞ்சம் குண்டான தோற்றத்துக்கு மாறியுள்ளார் நடிகை பாவனா. இருந்தும், தனது தற்போதைய உடல்தோற்றத்துடன் கூடிய புதிய படங்களை அவர் வலைத்தளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயங்கவில்லை.
நீண்ட நாட்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து கொஞ்சம் விலகியிருந்த நிலையில், மீண்டும் ரசிகர்களுடனான நெருக்கத்தைப் பேணும் வகையில், அண்மையில் சிவப்பு நிற லெஹங்கா எனப்படும் ஆடை மற்றும் சிவப்பு நிற சேலை, அதே நிறத்தில் ஜாக்கெட் அணிந்து கொஞ்சம் பருமனான உடற்தோற்றத்துடன் கூடிய படங்களை வெளியிட்டிருக்கின்றார் இந்த கேரளத்துப் பைங்கிளி.