15 ஆம் நூற்றாண்டு காலத்தில், அத்திலாந்திக்குப் பெருங்கடல்ப் பகுதியில், மேற்குப் போர்த்துக்கல்லுக்கும் ஸ்பெயினிற்கும் இடையில் அமைந்திருந்து மறைந்து போனது என நம்பப்படும் அண்டிலியா என்ற ஒரு கற்பனைத் தீவின் பெயரே இந்த 570 அடி உயரமுடைய 27 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி வீட்டிற்குச் சூட்டப்பட்டுள்ளது.
அன்டிலியா உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகும். மெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் 2014 ஆம் ஆண்டு உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றது.
4,00,000 சதுர அடி கொண்ட இந்த வீடு தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது.
இந்த பிரம்மாண்டமான இல்லத்தை பராமரிக்க உதவியாக 600 ஊழியர்கள் உள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட அறையும் உள்ளது.
அம்பானியின் இல்லமானது ஆரோக்கிய ஸ்பா, சலூன் , பால்ரூம், 3 நீச்சல் குளங்கள், யோகா மற்றும் நடன ஸ்டுடியோஸ் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
50 நபர்கள் அமரக்கூடிய தனிப்பட்ட தியேட்டர் இந்த வீட்டில் உள்ளது. மற்றும் இந்த தியேட்டரின் கூரையாக மாடித்தோட்டம் உள்ளது.
இந்த கட்டிடத்தின் ஆறு மாடிகள் வாகன தரிப்பிடத்திற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு 168 கார்களை நிறுத்தலாம்.
வீடு முழுவதும் சூரியன் மற்றும் தாமரை வடிவிலான அலங்காரங்கள் மட்டுமே உள்ளன. அவை படிக, பளிங்கு, மற்றும் முத்து போன்ற வெவ்வேறு அரிதான பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வீட்டின் கூரையில் 3 ஹெலிகொப்டர்கள் நிறுத்துவதற்கான ஹெலிபேட்கள் உள்ளன.

