Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
பாஞ்சாலங் குறிச்சிக்கு பின் மீண்டும் இணையும் பிரபு மதுபாலா

SooriyanFM Gossip - பாஞ்சாலங் குறிச்சிக்கு பின் மீண்டும் இணையும் பிரபு மதுபாலாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

596 Views
பிரபு 1982-ல் சங்கிலி படத்தில் அறிமுகமாகி 37 வருடங்களாக நடித்து வருகிறார். தற்போது அவரது 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.
அப்போது திரையுலகினர் பலர் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பிரபு பேசிதாவது:-

“நான் 37 வருடங்களாக சினிமாவில் நடித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. காலேஜ் குமார் 225-வது படமாக தயாராகிறது. 22 வருடங்களுக்கு முன்பு நானும் மதுபாலாவும் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் ஜோடியாக நடித்தோம். தற்போது காலேஜ் குமார் படத்தில் மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம்.

சிறுவயதில் இருந்தே எம்.ஜி.ஆர். படங்களை விரும்பி பார்ப்பேன். அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. இதுபோல் பத்மினி, சாவித்திரி, ஆகியோருடனும் சேர்ந்து நடிக்காதது வருத்தம். சினிமா வாழ்க்கையில் இவை எனது நிறைவேறாத ஆசைகளாக உள்ளன.

எனது மகன் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து எப்போது நடிப்பீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். நல்ல கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம்.” இவ்வாறு பிரபு கூறினார்.

காலேஜ் குமார் படத்தில் கதாநாயகனாக ராகுல் விஜய், கதாநாயகியாக பிரியாவட்லமனி ஆகியோர் நடிக்கின்றனர். எல்.பத்மநாபா தயாரிக்கும் இந்த படத்தை ஹரிசந்தோஷ் இயக்குகிறார். காஷிப் இசையமைக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top