நடிகை தமன்னா தனது ட்விட்டரில் கடும் சோகத்துடன் ஒரு பதிவை இட்டுள்ளார். சுமார் 850 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான Notre Dame தேவாலயம் நேற்று இரவு திடீரென தீ விபத்திற்கு உள்ளானதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீ விபத்தால், கட்டிடம் மற்றும் கூரைப் பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தீ விபத்து குறித்து, நடிகை தமன்னா பதிவிட்டுள்ளார்.
'உலகம் முழுவதும் உள்ளவர்களின் அமைதிக்கான இடமாக திகழ்ந்த Notre Dame தீயில் எரிந்தது, மிகுந்த சோகத்தைத் தந்துள்ளது'' என, நடிகை தமன்னா குறிப்பிட்டுள்ளார்.