Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
அரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா? புலம்புகிறார் மல்லையா

SooriyanFM Gossip - அரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா? புலம்புகிறார் மல்லையாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,113 Views
விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் பொருளாதார நெருக்கடியில் தாக்குப் பிடிக்க முடியாமல் தத்தளித்த அதே நிலை இப்போது இந்தியாவின் முன்னணி தனியார் விமான சேவையான ஜெட் ஏர்வேஸ் (Jet Airways ) விமான சேவைக்கும் நிகழ்ந்துள்ளது.
தனியார் விமான நிறுவனங்களை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. இந்தியாவில் தனியார் விமான நிறுவனங்களின் தலையெழுத்து இப்படித்தான் உள்ளது’ என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, தனது நிறுவனத்துக்காக வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து 9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. லண்டனில் பதுங்கியுள்ள இவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடனில் மூழ்கியதால், அதன் நிர்வாக பொறுப்பை வங்கிகள் ஏற்றன. அப்போது, அந்த நிறுவனத்துக்கு 1,500 கோடி ரூபா உடனடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசு கிங்பிஷர் ஏர்லைன்சை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது என மல்லையா புலம்பியிருந்தார். ஆனால், தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஊழியர்களுக்கே சம்பளம் தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, அவற்றுக்கான முன்பதிவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிலை குறித்து ட்விட்டரில் மல்லையா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டம் அடைந்தபோது, அதனை மீட்டெடுக்க 35,000 கோடியை மத்திய அரசு வழங்கியது. ஆனால், தனியார் விமான நிறுவனங்களை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. அவற்றை பாரபட்சத்தோடுதான் நடத்துகிறது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ்க்காக நான் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கே விரும்புகிறேன். ஆனால், அதனை வங்கிகள் ஏற்க மறுப்பதன் காரணம் என்ன? தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தையும், அதன் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் நீடா கோயலை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் உயரிய விமான சேவையை நினைத்து இந்தியா பெருமைப்பட வேண்டும். 

இந்தியாவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் இப்படி தோல்வியை சந்தித்துள்ளன. இவற்றின் தலையெழுத்து இப்படித்தான் உள்ளது என விஜய் மல்லையா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top