Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
அடுத்தடுத்து வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் தர்பார் காட்சிகள்

SooriyanFM Gossip - அடுத்தடுத்து வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் தர்பார் காட்சிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

441 Views
‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த் வீடியோ காட்சி இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
‘பேட்ட’ திரைப்படம் திரைக்கு வந்ததும் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். இதன் படப் பிடிப்பு மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் மற்றும் இதர கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் தோற்றங்கள் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்புக்கு ஆட்களை நிறுத்தி உள்ளனர். அதையும் மீறி புகைப்படங்கள் கசிந்து வருகின்றன. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதனால் அவருக்கு போலீஸ் சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து ‘போட்டோ சூட்’ நடத்தினர்.

அந்த புகைப்படம் இணையதளத்தில் ஏற்கனவே வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகளை ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கினார். அந்த காட்சிகளையும் திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையதளங்களில் வைரலாக்கினர்.

இதைப் பார்த்த சிலர் படப்பிடிப்பு முடியும் முன்பு அனைத்து காட்சிகளும் இப்படி சமூக வலைத்தளத்தில் வந்துவிடும் என்று மீம்ஸ் போட தொடங்கினர். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தி துணை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் செல்போன் கொண்டு செல்ல தடைவிதித்தனர். பார்வையாளர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது.

ஆனால், தற்போது மீண்டும் ரஜினிகாந்த் நட்சத்திர ஓட்டல் முன்னால் ஸ்டைலாக நடந்து வருவது போன்ற வீடியோ காட்சி இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top