அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் முதன்முதலாக வண்ண லேசர் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட டிரீம் ஸ்பேஸ்
டிஜிட்டல் அருங்காட்சியகம் (MODS) திறக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியத்தில் தொட்டு உணரக்கூடிய பொருட்கள் இல்லை, அத்தனையும் லேசர் விளக்குகளினால் மாத்திரமே அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வண்ண லேசர் விளக்குகளில் ஜொலித்த அருங்காட்சியகத்தை எண்ணற்ற பார்வையாளர்கள் கண்டுகளிக்கின்றனர்.
இது போன்ற லேசர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டிஜிட்டல் அருங்காட்சியகம் ஜப்பான் டோக்கியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

