Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
போலந்து சிறுமி, மோடிக்கு எழுதிய கடிதத்தில் அப்படி என்ன இருக்கின்றது?

Sooriyan Gossip - போலந்து சிறுமி, மோடிக்கு எழுதிய கடிதத்தில் அப்படி என்ன இருக்கின்றது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,216 Views
போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி பிரபலமாகியுள்ளார். 

அலிக்ஜா வனாட்கோ என்ற குறித்த சிறுமி, தனது தாய் மார்த்தாவுடன் கோவாவில் வசித்து வந்துள்ளார். எப்படி இருப்பினும் வீசா காலம் முடிவடைந்த நிலையிலும் அவர்கள் அங்கு தங்கியிருந்த நிலையில், தாயாரின் பெயர் கருப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், வீசா காலம் முடிந்த பின்னரும் தங்கி இருந்த குற்றத்திற்காக சிறுமியின் தாயார் மார்த்தா நாடு கடத்தப்பட்டார்.

இதையடுத்து சிறுமியை அழைத்துச் செல்வதற்காக தாய்க்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி, அலிக்ஜா தாயுடன் சொந்த நாடான போலாந்திற்கு திரும்பினார். இந்தச் சூழ்நிலையில் இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று மீண்டும் தற்போது பிரதமராக மோடி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களை கூறி கடிதம் ஒன்றை மிகவும் உருக்கமாக எழுதிய சிறுமி அலிக்ஜா, தனது சொந்த கருத்துக்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
அந்தக் கடிதத்தில், ''நான் கோவாவை மிகவும் நேசிக்கிறேன். அங்குள்ள விலங்கு மீட்பு மையத்தில் இணைந்து தன்னார்வ தொண்டு செய்து வந்தேன். அதனை நான் இழந்துவிட்டேன்'' மேலும் தாயுடன் அங்குள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்றுவந்த அனுபவம் குறித்தும், இருவரின் வீசா கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதால், அதனை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு மட்டுமன்றி புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை சிறுமியின் தாயார் மார்த்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மழலை கையெழுத்தில் அந்த சிறுமியால் எழுதப்பட்ட கடிதம், படிப்பவர்களை நெகிழச்செய்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top