Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
விஷாலின் பதவி கதிரைக்கு ஆபத்து - பாண்டவரை தோற்கடிக்குமா எதிரணி........???

Sooriyan Gossip - விஷாலின் பதவி கதிரைக்கு ஆபத்து - பாண்டவரை தோற்கடிக்குமா எதிரணி........???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

657 Views
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய நிர்வாகத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஷால் அணி எனப்படும் பாண்டவர் அணிக்கு இறுக்கமான ஒரு போட்டி நிலையை ஏற்படுத்தக் களமிறங்குகின்றது எதிரணி.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் நடிகர் விஷால், நடிகர் சங்க உறுப்பினர்களோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம் போன்ற திரைத்துறையின் ஏனைய மிகப் பிரதான சங்க உறுப்பினர்களுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதனால் வரவிருக்கும் தேர்தலில் விஷாலின் பதவி ஆசைக்கு ஆப்பு காத்திருப்பதாகவே தோன்றுகின்றது.

வரவிருக்கும் தேர்தலில் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால் போட்டியிடவுள்ள நிலையில், அவருக்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் களம் குதிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. காரணம், பல சந்தர்ப்பங்களில் விஷாலுடன் முரண்பட்டுக்கொண்டு தற்போதுவரை எதிரும் புதிருமாக இருப்பவர். ஆனாலும், இந்தத் தேர்தலில் தான் சங்கத்தின் செயலாளர் பதவிக்கு போட்டியிடவில்லை என்றும், விஷாலுக்கு எதிராக ஐசரி கணேஷ் தமது அணி சார்பாக களமிறங்க உள்ளதாக கூறியுள்ளார்.

விஷால் அங்கம் வகிக்கும் பாண்டவர் அணியில், சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் வேட்பாளராக களமிறங்க, பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தியும் போட்டியிடவுள்ளனர். அதேவேளை, துணை தலைவர்கள் பதவியை குறிவைத்து நகைச்சுவை நடிகர் கருணாஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், பூச்சி முருகனும் களம் குதிக்கின்றார்.

இது இப்படியிருக்க, எதிரணியில் ஐசரி கணேஷ் பொதுச்செயலாளர் கதிரையை தனதாக்கும் முயற்சியில் உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி வரும் நிலையில், நடிகர் உதயா துணைத்தலைவர் பதவிக்கான போட்டியில் மல்லுக்கட்டுகின்றார். அத்துடன், மேலும் சில பதவிகளுக்கான வேட்பாளர்களை களமிறக்கும் நடவடிக்கையில் எதிரணி மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், வாக்களிக்கவுள்ள உறுப்பினர்களிடம் செல்வாக்குப்பெற்ற ஒரு சில நடிகர்களை தமது பக்கம் களமிறக்கி தேர்தலில் வெற்றியை தாமதாக்க, குறித்த நடிகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் கோடம்பாக்கம் காற்று சொல்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top