ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ( SpaceX’s Crew Dragon ) மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ள 2 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரொக்கெட்களை அனுப்பி வந்த அமெரிக்கா, தன்னுடைய விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறுகளை தொடர்ந்து, ரொக்கெட்களை விண்ணுக்கு அனுப்புவதை நிறுத்தியது. ரஷ்ய ரொக்கெட் மூலம் மட்டும் வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் Crew Dragon என்ற விண்கலத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், Crew Dragonல் பயணிக்க உள்ள 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொப் பெஹங்கென் (Bob Behnken ), டக் ஹார்லெய் (Doug Hurley) என்ற அந்த இரு வீரர்களும் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.