Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
"வீரம்" கதையை விட்டு விலகிப்போன நடிகர் - பொலிவூட்டில் 'ஹிட்' அடிக்குமா.....???

Sooriyan Gossip - "வீரம்" கதையை விட்டு விலகிப்போன நடிகர் - பொலிவூட்டில் 'ஹிட்' அடிக்குமா.....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

682 Views
'தல' அஜித் நடித்து சூப்பர்ஹிட் அடித்த படம் "வீரம்". இந்தப் படத்தை இயக்குனர் சிவா தமிழில் இயக்கியிருந்த நிலையில், ஹிந்தி மொழி ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பொலிவூட்டிலும் திரை காண்கின்றது "வீரம்" திரைக்கதை. 
ஹிந்தித் திரையுலக இயக்குனர் பர்கத் சாம்ஜி "லொல்" என்ற பெயரில் இந்தப் படத்தை மீளுருவாக்கம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதுடன், "வீரம்" படத்தி தல நடித்த வேடம் ஏற்று இந்தப் படத்தில் நடிக்க அக்‌‌ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இருந்தும், இடையில் ஏற்பட்ட ஏதோவொரு இழுபறி காரணமாக "லொல்" என்ற இந்தப் படத்திலிருந்து தாம் விலகுவதாக நடிகர் அக்‌‌ஷய் குமார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதோடு, நடிப்பதற்கான திகதி ஒதுக்குவதில் உள்ள சிரமம் காரணமாகவே தாம் விலகுவதாகவும் காரணம் தெரிவித்துள்ளார்.

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "காஞ்சனா" என்ற பெயரில் வெளியான படம் தற்போது அவரது இயக்கத்திலேயே "லக்‌ஷ்மி பாம்" என்ற பெயரில் மீளுருவாக, அந்தத் திரைப்படத்தில் நடிகர் அக்‌‌ஷய் குமார் நடித்துக்கொண்டிருப்பதுடன், "சூர்யாவன்ஷி", "தி எண்ட்" ஆகிய நேரடி ஹிந்தித் திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கின்றார்.

இந்தநிலையில், "லொல்" திரைப்படத்தை எந்தக் காரணத்திற்காகவும் பிற்போட விரும்பாத இயக்குனர் பர்கத் சாம்ஜி, நடிகர் அக்‌‌ஷய் குமாருக்குப் பதிலாக, "ராஸி" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பொலிவூட் ரசிகர்களைக் கவர்ந்த விக்கி கௌஷல் என்ற நடிகரை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top