Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
சந்தாப்பணம் ஒழுங்கின்மையால், வேட்புமனு நிராகரிப்பு - நடிகர் சங்கத் தேர்தல்.

Sooriyan Gossip - சந்தாப்பணம் ஒழுங்கின்மையால், வேட்புமனு நிராகரிப்பு - நடிகர் சங்கத் தேர்தல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,802 Views
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாட்டு வேலைகள் மும்முரமாக ஒருபக்கம் நடைபெற்றுவரும் நிலையில், மறுபக்கம் வேட்பாளர்கள் தமக்கான ஆதரவைத் திரட்டும் முயற்சியில் முழுமூச்சாக இறங்கியுள்ளனர்.
சங்கத்துக்கான அடுத்த நிர்வாக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க விரும்பியோருக்கான மனுத் தாக்கல் காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இந்தத் தேர்தலுக்காக 90 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்றைய தினம் குறித்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

வேட்பாளராக காலம் காண்பதற்கு பல்வேறு தகுதிகள் தொடர்பில் பரிசீலனையில் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் 3 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள அவர்கள், சங்கத்துக்கான சந்தா தொகையை சரியாக கட்டாத காரணத்தாலேயே அவர்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நடிகர் விமல், நடிகரும் இயக்குனருமான ரமேஷ்கண்ணா மற்றும் நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகிய 3 பேரே குறித்த நிராகரிப்பிற்குரிய வேட்பாளர்கள் என்றும், இவர்கள் மூவரும்
பாக்கியராஜ் அணியில் இணைந்து செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தமது தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்ததாக கோடம்பாக்கம் செய்திகள் சொல்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top