Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
முழுமையான இரவுத் தூக்கம் இல்லாவிட்டால், எத்தனைப் பிரச்சனைகள் உண்டாகும் தெரியுமா?

Sooriyan Gossip - முழுமையான இரவுத் தூக்கம் இல்லாவிட்டால், எத்தனைப் பிரச்சனைகள் உண்டாகும் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,554 Views
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் மிக முக்கியமானதாகும். அந்த தூக்கம் இல்லாமல் போனால், பல வித உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதுடன், வெகு விரைவில் இளமை தோற்றம் மறைந்து விடும் என, மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்பவெப்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை உருவாகும். இதுவே தூங்குவதற்கு ஏற்ற காலம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரவில் தூங்கும் போது தான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும், அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் நமது சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துச் சென்றுள்ளனர்.

இரவில் நித்திரை கொள்ளாதவர்களிடத்தில், புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற பலவித நோய்கள் எளிதில் பற்றும்.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி என்பன உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் தேவையற்ற குறட்டை உண்டாகும். அத்துடன் குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும் படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்துத் தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.

மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து, பித்தநீரை அதிகரிக்கச்செய்து, நாம் உண்ட உணவுகள் எளிதில் ஜீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு ஜீரணமாகாமல் புளித்துப் போய் மலச்சிக்கல் பிரச்சனைகள் உண்டாகும்.

எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள, முழுமையான இரவுத் தூக்கத்தை தவற விடாதீர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top