Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
காதலிக்காக விமானத்தை கடத்த முற்பட்ட கோடீஸ்வரர்!!!

SooriyanFM Gossip - காதலிக்காக விமானத்தை கடத்த முற்பட்ட கோடீஸ்வரர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,945 Views
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜூ சல்லா என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30-ம் திகதி, ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தவுள்ளதாக விமானத்தின் கழிவறையிலுள்ள டிஸ்யூ பேப்பரில் ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் எழுதிவைத்துள்ளார்.

தொழிலதிபர் பிர்ஜு சல்லா எழுதிய இந்த மிரட்டலால், அந்த விமானம் அவசரமாக அகமதாபாத் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது, பிர்ஜூ சல்லா அங்கு கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக விமானத்தில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நபர் பட்டியலில் பிர்ஜூ சல்லா சேர்க்கப்பட்டார். மேலும், விமானக் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

பிர்ஜூ சல்லாவிடம் நடந்த விசாரணையில், விமானத்தை கடத்துவதாக மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், இந்த மிரட்டலின் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் டெல்லியில் செயல்படும் அலுவலகத்தை மூடிவிடும். அதனை மூடிவிட்டால் டெல்லியில் பணியாற்றும் தனது காதலி மும்பை திரும்பிவிடுவார் என்று நம்பினேன் என பதில் கூறினார்.

அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதோடு 5 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top