Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
சிந்துபாத் திரைப்படம் பற்றி விஜய் சேதுபதி கூறிய விடயம்!

Sooriyan Gossip - சிந்துபாத் திரைப்படம் பற்றி விஜய் சேதுபதி கூறிய விடயம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

152 Views

அருண் குமாரின் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் ‘சிந்துபாத்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடைபெற்றது.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி,

“சிந்துபாத் படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதைதான். கடல் கடந்து வந்த ஒருவன் மனைவியை தூக்கி கொண்டு போய்விடுவான். மனைவியை எப்படி கதாநாயகன் மீட்கிறான் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதையாகும்.

இந்த கதையில் கணவன், மனைவி உணர்ச்சி வசப்பட்ட காட்சிகள் அழகாகயிருக்கும். இந்த படத்தின் இரண்டாம் பாதி முழுவதுமே கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் காட்சிகள்தான்.

இந்த படத்தில் கதாநாயகனுக்கு சரியாக காது கேட்காது என்பதால் நாயகி சத்தமாக பேச வேண்டிய கதாபாத்திரமாகும். இதனால்தான் நடிகை அஞ்சலியை இயக்குநர் தேர்வு செய்தார். அஞ்சலி சாதாரணமாகவே கத்தி பேசுவார் என்பதால் அவரை தவிர இந்த கதாபாத்திரத்திற்கு எவரும் பொருத்தமாக இருக்கமாட்டார்கள்” எனக் கூறினார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் விவேக் வரிகளில் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

இத்திரைப்படம் எதிர்வரும் 21ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றது.

விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top