Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
கைது செய்யப்படும் நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் - முன்பிணை கோரி மனு.

Sooriyan Gossip - கைது செய்யப்படும் நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் - முன்பிணை கோரி மனு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

373 Views
தமிழ்த் திரைப்பட இயக்குனர் பா।ரஞ்சித் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தியமையைத் தொடந்து மதச்சண்டையை தூண்டுதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழகக் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட வழக்குப் பதிவின் காரணமாகத் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினால் தவிக்க ஆரம்பித்துள்ளார் பா।ரஞ்சித்.
அண்மையில், கும்பகோணம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இயக்குனர்
பா ரஞ்சித் கலந்துகொண்டு பேசுகையில், "ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது.  அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல। ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம் தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான்,  ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம்" என்ற கருத்தை கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு எதிராகவே தற்போது தமிழ் உணர்வாளர்கள் உட்பட்ட பலதரப்பட்டோரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுவரும் நிலையில், இந்த விவகாரத்தில் தான் சிலவேளைகளில் சிறை செல்லக்கூடும் என்ற பயத்தினால் தாம் கைது செய்யப்படுவதற்கு எதிராக முன்பிணை கோரி, மதுரை மாவட்டத்திற்கான உயர்நீதிமன்றக் கிளையில் பா।ரஞ்சித் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்।


அதேவேளை, தனக்கெதிரான இந்த எதிர்ப்பு நிலை குறித்து பா ரஞ்சித் கூறுகையில், "வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே நான் அவ்வாறு பேசினேன்.  எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல" என்று விளக்கமளிக்கின்றார் அவர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top