Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு சிக்கல் - கூறுகின்றார் சர்ச்சைகள் மன்னன்

Sooriyan Gossip - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு சிக்கல் - கூறுகின்றார் சர்ச்சைகள் மன்னன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

195 Views
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்க, இந்தத் தேர்தல் முறையற்றது எனத் தெரிவித்து தடை உத்தரவொன்றை நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்வதற்கான வேலைகள் மறுபக்கம் ஆரம்பித்துள்ளன.
இந்தநிலையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துவதற்கான தடை உத்தரவைப் பெறுவது பற்றிய விஷயம் தொடர்பில் நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், பிரபல நடிகருமான ராதா ரவி கருத்துத் தெரிவிக்கையில், "கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். நான் மாற்றம் வரலாம் ஏமாற்றம் வரக்கூடாது என்றேன். இப்போது அது தான் நடந்து இருக்கிறது. விஷால் மீது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக நின்ற அனைவரும் இப்போது அவருக்கு எதிராக நிற்கிறார்கள்.

கடந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினைப் பதிவு செய்துவிட்டு, "இந்தத் தேர்தலில் யார் ஜெயித்தாலும் மூன்று ஆண்டுகளில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிச் சென்றார். அந்தத் தேர்தலில் ஜெயித்தவர்கள் இப்போதுவரை எதையுமே நிறைவேற்றாததால் அனைவருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது। அந்த அணி பொய்களை கூறி ஜெயித்த அணி.

எதற்கெடுத்தாலும் நடிகர் விஷாலை முன்னிலைப்படுத்தி இப்போது அந்த அணியிலுள்ள எல்லோரையும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நடக்கும் என்று முன்பே கூறினேன். இன்னும் நிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது. இது சட்ட விரோதமான தேர்தல்। எதிர்வரும் 23ம் திகதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது. தற்போதுவரை சங்கத்தின் ஆட்சி நிர்வாகத்தில் இருப்போர் தாம் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யவில்லை। நிறைய குளறுபடிகள் நடந்திருக்கின்றன. இந்தத் தேர்தல் கண்டிப்பாக நடக்காது. ஒரு சில தினங்களுக்குள் நீதிமன்றத்தின் தலையீட்டுடன் இந்த முறையற்ற தேர்தல் நிறுத்தப்படும்" என்று கூறினார் கோடம்பாக்கத்தின் சர்ச்சை மன்னன் ராதா ரவி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top