Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
''கன்னத்தில் முத்தமிட்டால் , பார்த்தாலே பரவசம்'' ஜோடிகள் மீண்டும் இணைவு

SooriyanFM Gossip - ''கன்னத்தில் முத்தமிட்டால் , பார்த்தாலே பரவசம்'' ஜோடிகள் மீண்டும் இணைவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,018 Views
''கன்னத்தில் முத்தமிட்டால், பார்த்தாலே பரவசம்'' திரைப்படங்கள் மூலம் பலரின் வரவேற்பைப் பெற்றுக்கொண்ட மாதவன் - சிம்ரன் ஜோடிகள், 17 வருடங்கள் கழித்து,  இப்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் ‘'ராக்கெட்ரி-நம்பி விளைவு’' என்ற படத்தில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து, இந்த படம் தயாராகிறது. வெளிநாட்டுக்கு ரகசியங்களை வெளியிட தீர்மானித்ததாக குற்றம் சுமத்தி, நம்பி நாராயணன் கடந்த 1994 ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கை குற்றப்புலனாய்வு பிரிவு விசாரித்த நிலையில், நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று நிரூபித்தது. இதைத்தொடர்ந்து நம்பி நாராயணனுக்கு, கேரள அரசு 50 லட்சம் இந்திய ரூபாய்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று, நீதிமன்றத்தினால், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்பவங்களை மையமாக வைத்து, ''ராக்கெட்ரி'' படம் தயாராகி வருகின்றது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்திற்கு கதாநாயகியாக யார் நடிக்கிறார்? என்பதை படக்குழுவினர் அறிவிக்காமல் இருந்தனர்.

தற்போது இந்த படத்தின் கதாநாயகியாக சிம்ரன் நடிப்பதாக, நடிகர் மாதவன் அறிவித்து, அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top