Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
முதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......???

Sooriyan Gossip - முதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,623 Views
தற்போதைய வாழ்க்கைச் சூழலில் வயது மற்றும் பால் வேறுபாடின்றி அனைவரையும் வருத்தும் ஒன்றாக முதுகுவலி காணப்படுகின்றது.
தீராத வேதனையைக் கொடுக்கும் முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்களில் முக்கியமாக நமது வாழ்க்கைமுறை மற்றும் செய்கின்ற பணி மற்றும் சூழல் என்பனவும், உட்காருகின்ற ஆசனம் போன்ற காரணிகள் பெரும்பங்கு வகிக்கின்ற நிலையில், உடலின் உள்ளே ஏற்படுகின்ற நோய்களுக்கான அறிகுறியாகவும் இந்த முதுகுவலி அமைந்துவிடுகின்றது.

நாம் உட்காரும் முறை காரணமாக உடலின் தசை மற்றும் தசைநார்களில் ஏற்படும் சமநிலை மாற்றங்களால் முதுகுவலி ஏற்படுவதுண்டு. இதனை, சில பயிற்சிகள், சிறிது ஓய்வு என்பவற்றுடன் முறையான இருக்கையை தேர்வு செய்வதன் மூலம் குணமாக்கலாம். இப்படியான காரணங்கள் இல்லாமல் ஏற்படும் முதுகுவலி, உடலில் நமக்குத் தெரியாமல் உருவாகும் வேறேதேனும் பிரச்சினைகளை வெளிக்காட்டும் அறிகுறிகளாக இருக்கலாம்.

தசை, தசை நார்களில் ஏற்படும் பாதிப்பு, மூட்டு வலி, எலும்புகளின் முறையற்ற அமைப்பு போன்றவைகளும் முதுகுவலியின் அறிகுறிகளாக இருக்க முடியும். அத்துடன், எமது உடலில் சிறுநீர்ப்பை கீழ் வயிற்றில் அமைந்துள்ளது. சிறுநீர் வெளிப்போக்கு, கழிவு வெளிப்போக்கில் கட்டுப்பாடில்லாமல் இருப்பது, கீழ் முதுகு வலி, கால், உள்தொடை, பாதம் இவற்றில் உணர்வில்லாதது போல் இருப்பது எல்லாம் அவசர சிகிச்சை தேவைப்படுபவை ஆகும்.

தூக்கத்தில் திடீரென ஏற்படும் முதுகுவலி கோணல் மாணலாக படுப்பதன் காரணமாக இருக்கலாம். பிறகு சரி செய்து கொண்டும் வலி அதிகமாக இருப்பின் மருத்துவ கவனம் தேவை. பொதுவான முதுகுவலியாக, நெஞ்சில் ஒரு அழுத்தம், கழுத்து, தாடை, தோள் பட்டை இவற்றில் உண்டாகும் வலிகளும் உள்ளடங்கி காணப்படும்.

இதேவேளை, வியர்வை அதிகமாக வெளியாகுதல், வயிற்றுப் பிரட்டல், மூச்சு விடுவதில் சிரமம், சோர்வு போன்றவை மாரடைப்பின் வெளிப்பாடுகளாக இருக்கலாம். வயது அதிகரித்துக்கொண்டே செல்கையில் காலையில் எழுந்திருக்கும் பொழுது உடல் சற்று கடினமாகவும், வலியுடனும் இருக்கும். இது சற்று நீண்ட நேரம் கூட இருக்கலாம். இது ஒருவித வீக்கத்தின் பாதிப்பு. ஆரம்ப நிலையிலேயே இதற்கு நல்ல கவனம் கொடுத்தால் பாதிப்புகள் வெகுவாய் குறையும்.

அத்துடன், திடீரென உயரம் குறைந்தது போல் இருத்தல், அதிக கை, கால் அசைவுகள் இயலாமை, நடப்பதும், நிற்பதும் வலியினை அதிகப்படுத்துவது, திடீரென அதிக முதுகு வலி ஏற்படுதல் ஆகியன உடனடி மருத்துவ சிகிச்சைக்கு உட்பட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகளாக அமைகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top