Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
ஹொங்கொங்கில் தீவிரமைடைந்த போராட்டம் - மன்னிப்புக் கேட்ட கேரி லேம்

Sooriyan Gossip - ஹொங்கொங்கில் தீவிரமைடைந்த போராட்டம் - மன்னிப்புக் கேட்ட கேரி லேம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

303 Views
ஹொங்கொங் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்னும் வலிப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

அயல் நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில், குற்றவாளிகளை நாடு கடத்தும் சட்ட வரைபை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், தற்போது, நிர்வாக அதிகாரிக்கு எதிராக திரும்பியுள்ளது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற வலியுறுத்தலுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள், நேற்று வீதிகளில் நின்று பாரிய போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங், உலகின் மிகப் பெரிய வர்த்தக மையமாகும். சமீபத்தில், இங்கு, புதிய சட்ட வரைபு தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள், அவர்களுடைய நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவர் என்ற, இந்த சட்ட வரைப்பிற்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது.

அரசியல் ரீதியில் பழிவாங்க, சீனாவின் துாண்டுதலால், இந்த சட்ட வரைபு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, எதிர்க்கட்சிகள் கோஷமிட்டார்கள். இவர்களோடு பல்வேறு தரப்பு மக்களும் தமது வலுவான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றார்கள். தொடர்ந்து சில நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த சட்ட வரைபை மீளப் பெறுவதாக ஹொங்கொங்கின் பெண் நிர்வாக அதிகாரியான, கேரி லேம் அறிவித்தார்.

எவ்வாறான போதிலும் இந்த அறிவிப்பை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.

இந்த நிலையில், நேற்றும் பாரிய போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக்காரர்கள் கைதிகளுக்கு எதிரான சட்ட வரைபை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக காவல்துறையை அதிகாரத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய தலைமை நிர்வாகி, கேரி லேம், பதவி விலக வேண்டும்' என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட கேரி லேம், தாம் இவ் விடயத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளை நியாயமாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ள இருப்பதாக, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top