Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
பாடசாலைப் பேரூந்தில் 6 வயதுச் சிறுவன் மர்ம மரணம்

Sooriyan Gossip - பாடசாலைப் பேரூந்தில் 6 வயதுச் சிறுவன் மர்ம மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,511 Views
இந்தியச் சிறுவன் ஒருவன் பாடசாலைக்குச் செல்லும்  பேரூந்தில் நித்திரையில் இருந்த நிலையில் பலியாகிய சம்பவம், மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பைசல் என்பவர் டுபாயில் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், டுபாயில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.
 
இவர்களின் மூன்றாவது மகனான 6 வயதான முஹம்மது பர்ஹான், அங்குள்ள பாடசாலையில் படித்து வருகின்றார். நேற்றும் வழக்கம்போல் காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து பாடசாலை வாகனத்தில் ஏறிச்சென்ற முஹம்மது பர்ஹான், போகும் வழியில் கண்ணயர்ந்து உறங்கியுள்ளான்.
 
பாடசாலை வந்தும்கூட மற்றைய மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்றிந்தாலும் குறித்த மாணவன் பேரூந்தில் இருந்து இறங்கவில்லை. இதை அறியாத அந்தப் பேரூந்தின் சாரதி வாகனத்தை பூட்டிவிட்டு வேறு வேலைகளை கவனிக்கச் சென்றிருந்துள்ளார்.

மாலை 3 மணியளவில் வகுப்புகள் முடிந்து பிள்ளைகள் வெளியே வந்தபோது வாகனத்தை திறந்த சாரதி உள்ளே முஹம்மது பர்ஹான் உயிரற்ற நிலையில் இருக்கையில் சரிந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாடசாலை நிர்வாகம் அளித்த தகவலையடுத்து விரைந்துவந்த பொலீசார் குறித்த மாணவனின் உடலத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, முஹம்மது பர்ஹானின் மூத்த சகோதரிக்கு அடுத்த மாதம் 25-ம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவன் பலியாகியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top