Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
அணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை

SooriyanFM Gossip - அணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

356 Views
நிர்ணயிக்கப்பட்ட  நிபந்தனைகளை மீறி, யுரேனியத்தை அதிகளவில் செரிவூட்டி, அணு ஆயுத மூலப்பொருட்களைத் தயாரிக்கவுள்ளதாக,  ஈரான் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பல தீவிரவாத அமைப்புக்களுக்கு, ஈரான் உதவி செய்வதாக குற்றம் சுமத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை, சில மாதங்களுக்கு முன் ரத்துச் செய்து, பொருளாதார தடைகளை விதித்தார்.

இந்த நிலையில், ஜப்பான் எண்ணெய் கப்பல் அருகே, வெடிக்காத கண்ணிவெடிகளை ஈரான் படையினர் அகற்றி, ஆதாரத்தை அழிக்க முயலும் வகையிலான காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை அமெரிக்கா கடந்த தினம் வெளியிட்டது.

இதனிடையே அடுத்த 10 நாட்களில், அணு ஒப்பந்த வரம்பை மீறி, யுரேனியம் செறிவூட்டல்  அளவை அதிகரிக்கவுள்ளதாக, ஈரான் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக ஈரானின் தேவைக்கு ஏற்ப, யுரேனியம் செறிவூட்டல்  அளவு அதிகரிக்கப்படும். இது 3.67 சதவீதத்திலிருந்து எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அதிகரிக்கப்படலாம் என, கூறப்படுகின்றது.

இது அமெரிக்காவுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கை என, பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top