Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
நடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் "சர்பத்" - கூட்டணி கை கொடுக்குமா....???

Sooriyan Gossip - நடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் "சர்பத்" - கூட்டணி கை கொடுக்குமா....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

255 Views
பெரிய எதிர்பார்ப்பு எதனையும் ஏற்படுத்தாது அமைதியாக வெளிவந்து, பின்னர் அனைவரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் "பரியேறும் பெருமாள்". இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் ஏற்றம் காண ஆரம்பித்திருக்கின்றார் நடிகர் கதிர்.
"பரியேறும் பெருமாள்" பெற்றுக்கொடுத்த பெயரை சிறப்பாகத் தக்கவைக்கத் தெரிந்த கதிர், தொடர்ந்து வந்த வாய்ப்புக்களை நிதானமாகக் கையாண்டு தற்போது நம்ம விஜய் நடிக்கும் "தளபதி 63" திரைப்படத்தில் முக்கியமான பாத்திரமொன்றை ஏற்று நடித்துக்கொண்டிருக்கின்றார். இதன்மூலம், தளபதி ரசிகர்களின் செல்வாக்கை பயன்படுத்தி தனது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படத்துக்கான வசூலை சிறப்பாக்கும் தந்திரத்தையும் தெரிந்து வைத்திருக்கின்றார்.

இந்த நிலையில், நடிகர் கதிர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் '7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்' லலித்குமார் 'வயாகொம் 18 ஸ்டுடியோஸ்' நிறுவனத்தோடு இணைந்த தயாரிப்பில் திரை காணப்போகின்றது. "சர்பத்" எனும் பெயரில் இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகை ரகசியா கதிர் ஜோடியாக அறிமுகமாகப்போகும் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முதல்முறையாக இணைந்து கலக்கவிருக்கின்றார்.

இந்தநிலையில், "சர்பத்" திரைப்படத்திற்கான இசையை 'சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்' அஜிஸ் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், மெல்ல மெல்ல வளர்ந்து வரும் இந்தப் படத்தின் காட்சிகள் திண்டுக்கல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் சென்னையிலும் படமாக்கப்படுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top