Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

Sooriyan Gossip - தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,931 Views
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான  நைஜீரியாவில் உள்ள கால்பந்தாட்ட மைதானம் ஒன்றில், போகோ ஹராம் தீவிரவாதிகள், நேற்றைய தினம் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலின் போது, குறைந்தபட்சம் 30 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக, அந்த நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ''கொண்டுகா'' என்ற நகரில், உள்ளூர் கால்பந்து போட்டியின் ஆட்டத்தை நேரடியாகப் பார்வையிட, நுாற்றுக்கணக்கான ரசிகர்கள், மைதானத்தில் குவிந்த வண்ணம் இருந்தார்கள்.

அப்போது, உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி வந்த தீவிரவாதிகள் மூவர், ரசிகர்கள் நிறைந்திருந்த பகுதிக்குள் புகுந்து, தமது உடலில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இதில், 30க்கும் மேற்பட்ட அப்பாவிகள், உடல் சிதறி கோரமாகப் பலியாகினர். அத்துடன் இந்த தாக்குதலில் காயமடைந்த பலர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், குறித்த பகுதியில் அடிக்கடி, தாக்குதல் நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும், போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 27 ஆயிரம் பேர் பலியானதுடன், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top