Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
சமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்

Sooriyan Gossip - சமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

117 Views
ஹொங்கொங்கில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த, சமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க், நேற்று விடுதலை செய்யப்பட்டார். இவரது விடுதலையுடன் அங்கு முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்னும் தீவிரம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில், வெளிநாடுகளால் தேடப்படும் குற்றவாளிகள் நாடு கடத்தப்படுவர்' என, புதிய சட்ட வரைபு கொண்டு வரப்பட்டது.

சீனாவின் நெருக்குதலால், அரசியல் ரீதியில் பழிவாங்க, இந்த சட்ட வரைபு கொண்டுவரப்பட்டதாக, பல்வேறு தரப்பினர் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களின் எதிர்ப்பினால், குறித்த சட்ட வரைபை திரும்பப் பெறுவதாக, ஹொங்கொங்கின், பெண் நிர்வாகி, கேரி லேம் அறிவித்தார்.

ஆனால், அதை ஏற்காத போராட்டக்காரர்கள், 'கேரி லேம் பதவி விலக வேண்டும்' என, வலியுறுத்தி, போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த, 2014ல், ஹாங்காங்கில் நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, சமூக ஆர்வலர், 22 வயதான ஜோஷுவா வோங்க், நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், நாடு கடத்தும் சட்ட வரைபை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தின்போது, வோங்கை விடுதலை செய்யக், கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, சிறையில் இருந்து அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியேறிய அவர் நாடு கடத்தும் சட்டவரைபை எதிர்த்து முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக, கூறியுள்ளார்.
 
இதன் காரணாமாக ஹொங்கொங் போராட்டம் மேலும் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top