Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
அதிக மன அழுத்தம் கொண்ட இளைஞர்கள், இங்கு தான் உள்ளனர்!

SooriyanFM Gossip - அதிக மன அழுத்தம் கொண்ட இளைஞர்கள், இங்கு தான் உள்ளனர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,003 Views
உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் படி, அதிக மன அழுத்தத்தைக் கொண்ட இளைஞர்கள், இந்தியாவிலேயே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதுமாக 30 கோடிக்கும் அதிகமானவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் மற்றும் மனநோய் போன்ற பிரச்சனைகள் குறித்து, சர்வதேச நாடுகள் அதிக கரிசனை கொண்டுள்ளன.

இந்நிலையில் மனிதர்களைப் பாதிக்கும் நோய்களில், மனநோய் மிகக் கொடுமையானதாக இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

மன அழுத்தம் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்திய மக்கள் தொகையில் 6.5 சதவீதத்தினர் மன அழுத்தத்தில் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் இளைஞர்களில், பத்தாயிரம் பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா, அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் இளைஞர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மன அழுத்தத்தில் இருப்பதை கண்டுகொள்ளாமல் இருந்தால், இளம் வயதில் முதுமை தோற்றம், உடல் மற்றும் மன ஆரோக்கியம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுபோன்ற பிரச்னைகைளில் இருந்து, இளைஞர்களை மீட்டெடுக்க, ஒவ்வொரு நாடும், அர்ப்பணிப்புடன் பல விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top