Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
முட்டிக்கொள்ளும் பாரதிராஜாவும் 'புல்லுருவி' விஷாலும் - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்

Sooriyan Gossip - முட்டிக்கொள்ளும் பாரதிராஜாவும் 'புல்லுருவி' விஷாலும் - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

449 Views
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் வாக்களிப்பு நிலையம் தொடர்பில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும் குழப்பங்களுக்கும் இழுபறிக்கும் மத்தியில் ஒருவாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தத் தேர்தலில், சங்கத்தின் நடப்பு ஆட்சி அதிகாரத்திலுள்ள விஷால் தரப்பான 'பாண்டவர்' அணியை எதிர்த்து இயக்குனர் மற்றும் நடிகரான கே.பாக்யராஜ் தலைமையிலான 'சுவாமி சங்கரதாஸ்' அணியும் பலப்பரீட்சையில் இறங்கியுள்ள நிலையில், இரண்டு தரப்பினரும் தமக்கான ஆதரவை திரட்டிக்கொள்வதில் மும்முரமாக இறங்கியுள்ளன.

இந்தநிலையில், தேர்தலுக்கான வாக்களிப்பு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவிருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த இடத்தை பயன்படுத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவை குறித்த கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதோடு, அந்த இடம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதே தடைக்கான காரணம் என்றும் விளக்கமளித்துள்ளது. அத்துடன், வாக்களிப்பிற்கான மாற்று இடத்தை தேர்தல்குழு பரிந்துரைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது இப்படியிருக்க, திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு சொத்து இழப்பினால் நலிவடைந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகள் கல்வியில் மேம்பட உதவித்தொகை வழங்கும் விழா ஒன்று அண்மையில் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது. இதில், இயக்குனர் பாரதிராஜா நடிகர் விஷாலுக்கு எதிராக கருத்து ஒன்றை பொதுவெளியில் கூறியிருப்பது கோடம்பாக்கத்தின் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

குறித்த விழாவில், 'சுவாமி சங்கரதாஸ்' அணி வேட்பாளரான ஐசரி கணேஷ் தனது சொந்த செலவில் இருந்து 26 தயாரிப்பாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாவுக்கான காசோலைகளை வழங்கி வைக்க, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா கருத்து தெரிவிக்கையில், ‘‘தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது தமிழ் திரைப்பட நடிகர் சங்கமாக மாற வேண்டுமென்றால் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றி பெற வேண்டும். அதேபோன்று தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்தை தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் வர்த்தக சபை என மாற்றியே தீருவேன். நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஒரு புல்லுருவியாக விஷால் இருக்கிறார். அதைப் பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என்று கூறியிருந்தார்.

நடிகர் விஷாலை புல்லுருவி என்று குறிப்பிட்டு 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா பேசியது தற்போது திரையுலகம் சார்ந்தோர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்கிறது கோடம்பாக்கக் காற்று.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top