Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
கருணைக்கொலை செய்ய இன்று முதல் அவுஸ்திரேலியாவில் அனுமதி

Sooriyan Gossip - கருணைக்கொலை செய்ய இன்று முதல் அவுஸ்திரேலியாவில் அனுமதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,166 Views
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்கும் சட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ஒருவர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு, அந்நோயினால் பெரிதும் துன்பப்படுகிறார் என்றால், அவருக்கு எந்த சிகிச்சையும் பலனளிக்காத சந்தர்ப்பம் வரும்போது அவரை அந்த துன்பத்திலிருந்து விடுவிக்க, அவரைக் மருந்துமூலம் ''கொலை'' செய்யும் நடைமுறை தான் கருணைக் கொலை.
 
இதற்கு எந்தளவிற்கு ஆதரவு இருக்கின்றதோ அதேபோன்று எதிர்ப்பும் காணப்படுகின்றது. இந்தநிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கடந்த 2017-ம் ஆண்டு கருணைக் கொலையை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆனபோதிலும், இந்தச் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த கருணைக்கொலை இலகுவில் கிடைக்க வாய்ப்பில்லை. இதற்கு முக்கிய சில நிபந்தனைகள் வித்திக்கப்பட்டுள்ளன.

நோயால் அவதிப்பட்டு, உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அந்த நபர் தன்னை கருணைக் கொலை செய்யும்படி வைத்தியர்களிடம் கேட்க முடியும். இதற்கான அனுமதியை பெறுவதற்கு, வசிப்பிட ஆவணங்கள், பல மருத்துவர்களின் மதிப்பீட்டுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் 12 பேருக்கு கருணைக் கொலைக்கான அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, ஒவ்வொரு ஆண்டும் 150 பேர் வரை இந்த சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்றும் விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.

இதனிடையே, நெதர்லாந்தில் 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கருணைக் கொலை முதல் தடவையாக சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் கருணைக் கொலை சட்டபூர்வமாக்கப்பட்டது.

இருப்பினும், இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கருணைக் கொலை சட்ட விரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top