Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
லட்சுமி அகர்வால் போன்ற தோற்றத்தைப் பெற, பலமணிநேரம் ஆனது - தீபிகா படுகோனே

SooriyanFM Gossip - லட்சுமி அகர்வால் போன்ற தோற்றத்தைப் பெற, பலமணிநேரம் ஆனது - தீபிகா படுகோனேSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,300 Views
திராவகவீச்சுத் தாக்குதலால் தனது அழகான முகத்தை இழந்த லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு, படமாக உருவாக்கி வருகின்றது.  பாஜ்ரா மஸ்தானி, பத்மாவத், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தீபிகா படுகோனே இந்த படத்தில், லட்சுமி அகர்வாலின் வேடத்தை ஏற்று நடிக்கின்றார்.

''சபாக்'' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை தீபிகா படுகோனே தயாரித்து வருவதும் சிறப்பம்சமாகும். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

பெரும்பாலும் இந்த வருட இறுதியில் சபாக், திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், சபாக் படத்தில் நடிப்பது குறித்து தீபிகா படுகோனே கருத்து வெளியிட்டுள்ளார்.

“சபாக் படம் எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் சிறந்த படமாக இருக்கும். எனது ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆயிரம் கண்களுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, எனது கணவர் ரன்வீர் சிங்கும், இந்த அற்புதமான படத்தை பார்க்க, ஆவலுடன் இருக்கின்றார்.

இந்த படத்தில், திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் போன்ற தோற்றத்தைப் பெற, பலமணிநேரம் ஒப்பனை செய்துகொள்ள வேண்டியிருந்தது. நிச்சயமாக இந்த திரைப்படம் திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களின் வாழ்க்கையையும், உயிர்ப்புடன் உணர்த்துவதாக அமையும்'' என கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top