Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
மாயமான மலேசிய விமானம் MH 17-நடந்தது இதுவா?

SooriyanFM Gossip - மாயமான மலேசிய விமானம் MH 17-நடந்தது இதுவா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,710 Views
2014ஆம் ஆண்டு ஜூலை மாதம், கிழக்கு உக்ரைனில்  விழுந்து நொறுங்கிய மலேசிய விமானத்தை, சுட்டு வீழ்த்தியதாக நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளிவந்துள்ளன.

இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும் ,லியோனிட் கார்சென்கோ எனும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி, பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 298 பேரை பரிதாபகரமாக கொலை செய்ததாக, நெதர்லாந்து விசாரணையாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பான நீதிமன்ற வழக்கு, 2020 ஆண்டு மார்ச் மாதம் நெதர்லாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி,ஆம்ஸ்டார்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த MH 17 விமானம்,அடுத்த நாள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரை சென்றடைய இருந்தவேளையில்,பயணத்தை ஆரம்பித்த சில மணி நேரங்களில், ரஷ்ய - உக்ரைன் எல்லையில் இருந்து, சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது.

உக்ரைன் அரசு மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் பிரிவினைவாத குழுக்கள் ஆகியோர் இடையே மோதல் நிலவி வந்த காலப்பகுதியில் தான் இவ்வாறு நடைபெற்றுள்ளது.அப்போது உக்ரைன் ராணுவ விமானங்கள் பலவும் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கூட்டு விசாரணை குழு இந்த விமானம் காணாமல் போனது தொடர்பாக ஒரு பெரிய பட்டியல் இருப்பதாகவும் ,ஆதாரம் கிடைத்தால் வெளியிடுவதாகவும் அறிவித்திருந்தது.விசாரணைகள் ஆரம்பித்ததும் தகவல் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.பார்க்கலாம்...

இந்த நிலையில், இகோர் கிர்கின் என்பவர் ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் கர்னல் ஆவார்.அவருக்கு கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த டோனெட்ஸ்க் என்ற நகரத்தின் பாதுகாப்பு அமைச்சர் எனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய கூட்டமைப்பின்,உயரிய ராணுவ அதிகாரி என மதிக்கப்படுபவர் கிர்கின்.ஆயுதக் குழுக்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை என்பதை மட்டுமே இப்போதைக்கு தன்னால் சொல்ல முடியும் என தாம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top