Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - பாதிப்பில் 'பாடும் நிலா'

Sooriyan Gossip - தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - பாதிப்பில் 'பாடும் நிலா'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

150 Views
தமிழ்நாட்டில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், அன்றாடத் தேவைக்கான நீருக்கே பெரும் திண்டாட்டத்தில் மக்கள் உள்ளனர். இதனால், பொது குழாய்களில் தண்ணீர் பிடிக்க வருவோருக்கிடையில் வழக்கமாக நடைபெறும் குழாயடி சண்டை, தற்போது கொலை வழக்காக மாறுமளவுக்கு இந்த தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்ட ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக, சென்னை பெருநகரத்தில் பெரும்பாலான தனியார் விருந்தகங்கள் கூட தற்காலிகமாக மூடப்படும் அளவிற்கு இந்த தண்ணீர் பற்றாக்குறை தாக்கம் கொடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடை விரித்துள்ள பல வெளிநாட்டு IT நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீட்டிலிருந்தே அலுவலகக் கடமைகளை கவனிக்குமாறு பணித்துள்ளன.

இந்தநிலையில், தண்ணீர் சேமிப்பு மற்றும் நீர் முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வையும், தண்ணீர் பற்றாக்குறையால் தாம் பட்ட அவஸ்தைகளையும் பொதுவெளியில் பகிர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பிரபலங்கள் இறங்கியுள்ளனர். அந்தவகையில், சென்னையில் நடைபெற்ற "கூர்கா" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கலந்துகொண்டு பேசுகையில், "தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல வி‌ஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். அதற்காக உள்ள சின்ன சின்ன வழிமுறைகளை நம் அன்றாட வாழ்வில் கைக்கொண்டால் போதும். தண்ணீரை மிச்சப்படுத்தி விடலாம்.

உதாரணமாக, நாம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது. அதேபோல், தினமும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத்தாமல் வாரத்திற்கு இரண்டு ஆடைகளை மட்டும் மாற்றி மாற்றி பயன்படுத்தினால் சலவைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மிச்சமாகும். நாம் அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அடுத்த தலைமுறையினருக்கு பணம், சொத்து கொடுக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் தண்ணீர். அதனால் அவர்களுக்கு தண்ணீர் சேமித்து கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், நான் குளிப்பதற்கு ஒரு அரை வாளி தண்ணீருக்காக அரை மணி நேரமாக வீட்டில் காத்து கொண்டு இருந்தேன்" என்று கூறி தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தில் தனது இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது என்பதை கூறாமல் கூறி நின்றார் பாடும் நிலா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top