Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
இன்று சர்வதேச அகதிகள் தினம்

SooriyanFM Gossip - இன்று சர்வதேச அகதிகள் தினம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

181 Views
தனக்கான வீடு, உடைமை, உரிமை என அனைத்தையும் இழந்து, கவனிப்பாரற்ற நிலையில், பிறரிடம் தஞ்சம் கோருபவர்கள், ''அகதிகள் அல்லது ஏதிலிகள்'' என்று அழைக்கப்படுகிறார்கள். 

இவர்களது நம்பிக்கை, பலம், மற்றும் விடாமுயற்சி என்பவற்றை ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி, சர்வதேச அகதிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

''அகதிகளுடன் செயல்படுங்கள்''' என்ற தொனிப்பொருளின்  கீழ், இந்த ஆண்டு, சர்வதேச அகதிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தத்தமது எதிர்கால வாழ்க்கைக்கான வழியின்றி, வெறுமனே கனவுகளை தவிர ஏனைய அனைத்தையும் இழந்து, உள்நாட்டிலோ அல்லது நாடு கடந்தோ இன்று வரை பலர் அகதிகளாக தவித்து வருகின்றனர்.

இவர்களுக்குக் கட்டாயமாக அனைத்து நாடுகளும் உதவியளிக்க வேண்டும் என, பலர் பிரார்த்தனை செய்து வருகின்றார்கள். இவர்களுக்கான போஷாக்கான உணவு, பாதுகாப்பு, கல்வி, வதிவிடம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை சர்வதேச நாடுகள் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அகதிகளை பாதுகாக்கும் பல அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.

உலகளவில் நடத்தப்பட்ட அகதிகள் தொடர்பான ஆய்வொன்றின் முடிவில், நிமிடத்துக்கு 30 பேர் தத்தமது இருப்பிடத்தை இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு, தஞ்சம் கோரிய அகதிகளின் எண்ணிக்கை சரமாரியாக அதிகரித்துள்ளதாகவும், மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top