Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
நிஜம் - பெற்ற தாயை இப்படியும் கொடுமைப்படுத்துவார்களா?

Sooriyan Gossip - நிஜம் - பெற்ற தாயை இப்படியும் கொடுமைப்படுத்துவார்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,652 Views
பெற்ற தாயை விபரிக்க முடியாத அளவிற்கு கொடூரமாக சித்திரவதை செய்து, கொலை செய்த அவரின் மகன் மற்றும் மருமகள் மீது டுபாய் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

29 வயது இந்தியர் மற்றும் அவரின் மனைவியே இந்தக் கொடுமையை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் ஜூலை முதல் அக்டோபர் வரை தாயாரை கொடுமை செய்து, இறுதியில் கடந்த அக்டோபர் 31-ம் திகதி அவர் இறந்துள்ளார்.
 
இந்த கொடூர சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய குறித்த எதிர்வீட்டுப் பெண், "29 வயது இந்தியரும், அவரின் மனைவியும் வசித்த அதே குடியிருப்பில், அவர்களின் எதிர் வீட்டில் தான் நான் குடியிருக்கிறேன். ஒருநாள் என்னிடம் அந்த இந்தியரின் மனைவி வந்து என் அத்தை இந்தியாவிலிருந்து வந்துள்ளார், அங்கு அவரின் மகள் அவரை சரியாகப் பராமரிக்கவில்லை. எனவே இனி அவர் இங்குதான் இருப்பார் என்று கூறினார்.

இதன் பின்னர் ஒருநாள், அந்த இந்தியர் வீட்டு மாடியில் அந்த வயதான அம்மா நிர்வாணமாகக் கிடந்தார். உடல் முழுவதும் சூடு வைக்கப்பட்டு காயங்களுடன், அழுதுகொண்டே, வலியால் துடித்தார். நான் அந்த இந்தியரின் வீட்டு கதவைத் தட்டி, உங்கள் அத்தை மாடியின் முற்றத்தில் விழுந்து கிடக்கிறார். வலியால் துடிக்கிறார். உடனடியாக காப்பாற்றுங்கள் என்று கூறி ஆம்புலன்ஸை அழைக்கிறேன் என்றேன். அப்போது அந்த தாயின் அழுகுரல், வலியால் துடித்த குரல் என் காதில் ஒலித்தது வேதனையாக இருந்தது.

பிறகு ஆம்புலன்ஸ் வந்தவுடன், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உதவியுடன் அந்த வயதான அம்மாவை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தேன். அவரின் மகன் அப்போது கூட உதவி செய்யவில்லை" என கூறியுள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது வெறும் 29 கிலோ நிறையில் மட்டுமே அந்த அம்மா இருந்துள்ளார். மேலும் கை, கால் எலும்புகள் முறிக்கப்பட்டு வீக்கத்துடன், உடல் முழுவதும் பல்வேறு சூட்டுக்  காயங்களுடன், கண் கருவிழிகள் சிதைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பிறகு அந்த அம்மா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தற்போது இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் அந்த அம்மாவின் மகன் மற்றும் மருமகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top