Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
நேர் கொண்ட பார்வை பட ரிலீஸில் புதிய சிக்கல் - பண மோசடி

SooriyanFM Gossip - நேர் கொண்ட பார்வை பட ரிலீஸில் புதிய சிக்கல் - பண மோசடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

897 Views
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
யுவன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கிடைத்த இந்த வரவேற்பை தொடர்ந்து எதிர்வரும் ஓகஸ்ட் 10 திகதிக்கு முன்னதாகவே, படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் மீது 2.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியளவில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் போது கடனாக பெற்ற 2.5 கோடி ரூபாவை தனக்கு திரும்பத் தரவில்லை என்று கூறி, பிரவீன் ஷ்யாம் என்பவர் ஜெய்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்தில் மோசடி முறைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

அவர் கொடுத்த முறைப்பாட்டில், நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதாக கூறி போனி கபூர் என்னிடம் 2.5 கோடி ரூபாய் கடனாக பெற்றார். ஆனால், அதனை திரும்பத் தரும் போது இரு மடங்காக தருவதாக கூறினார். தற்போது வரையில் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போனி கபூர் தரப்பில் இருந்து, இது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top