Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
நீதிபதியின் விமர்சனத்தால், உள்ளூர உதறலில் பா.ரஞ்சித் - கைது செய்யப்படும் அபாயம்.

Sooriyan Gossip - நீதிபதியின் விமர்சனத்தால், உள்ளூர உதறலில் பா.ரஞ்சித் - கைது செய்யப்படும் அபாயம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

478 Views
சோழச் சக்கரவர்த்தி ராஜராஜ சோழ மன்னன் ஆட்சிக்காலம் பற்றி பொதுவெளியில் தெரிவித்த கருத்துக்கு எல்லாப் பக்கத்திலிருந்தும் கிளம்பியிருந்த எதிர்ப்பலையினால் திணறிப்போய்க் கிடக்கின்றார் இயக்குனர் பா.ரஞ்சித்.
காவல்துறை வழக்கு வரை சென்று கைது செய்யப்படும் அவலத்தை எதிர்கொண்ட நிலையில், தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் முன்பிணை கோரிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் பா. ரஞ்சித்.

நேற்றையதினம் அவரது மனு தொடர்பில் மதுரை உயர் நீதிமன்றம் ஆராய்ந்த நிலையில், அங்கும் இயக்குனர் பா.ரஞ்சித் நீதிபதியின் விமர்சனத்துக்கு உட்பட்டுள்ளதுடன், குறித்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பா.ரஞ்சித் நீதிமன்றில் முன்வைத்த மனுவில் தன்னிலை விளக்கத்தை தெரிவிக்கையில், "ஜூன் மாதம் 5ம் திகதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.

சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் “செந்தமிழ் நாட்டு சேரிகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன். நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 பிரிவு 1-ன் படி பேச்சுரிமை எனக்கு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமலும் முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளாமலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். எனது பேச்சு எந்த தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆகவே என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிப்பதோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் பா.ரஞ்சித் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் தனது வாதத்தில் கருத்துக்களை முன்வைத்தபோது, பல்வேறு புத்தகங்கள் குறிப்பாக தமிழக அரசு வெளியிட்ட புத்தகம் ஒன்றிலேயே பா.ரஞ்சித் பேசியது தொடர்பான குறிப்புகள் இருப்பதாகவும், ஜூன் மாதம் 5ம் திகதி இந்தக் கருத்துக்கள் தனது கட்சிக்காரரால் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டபோது உடனடியாக எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்பட்டிராத நிலையில், ஜூன் 11ம் திகதியே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். அத்துடன், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பேச்சுரிமை என்பது அனைவருக்கும் உள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரினார்.

இந்த நிலையிலேயே, பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? என்று குறித்த மனு மீதான விசாரணையை மேற்கொண்ட நீதிபதி பாரதிதாசன் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல், தமிழக அரசு பதிப்பித்த புத்தகத்தில் பயிர் செய்வோர் நிலத்தை சொந்தமாக வைக்கலாம் எனவும், பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், ராஜராஜ சோழன் காலத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழ மன்னன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என கூறியதற்கான ஆதாரம் எங்குள்ளது? எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசினீர்கள்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, குறித்த மனு மீதான நேற்றைய விசாரணை நேர முடிவில், பா.ரஞ்சித் மீது காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆதாரங்கள் மற்றும் இது தொடர்பான ஆவணங்களுடன் விரிவான பதில்மனு ஒன்றை நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறும் தஞ்சாவூர் திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி பாரதிதாசன்.

எதிர்வரும் ஜூலை மாதம் 8ம் திகதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றுகூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு உள்ளூர உதறல் எடுக்க ஆரம்பித்துள்ளது .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top