Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் "சிந்துபாத்" - நடப்பது என்ன.....???

Sooriyan Gossip - அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் "சிந்துபாத்" - நடப்பது என்ன.....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

381 Views
"சிந்துபாத்" திரைப்படத்தின் வெளியீட்டுக்கு அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல்களை அடுத்து, நன்றாகப் போய்க்கொண்டிருந்த 'மக்கள்செல்வன்' விஜய் சேதுபதிக்கு யார் கண் பட்டதோ என்று விஜய் சேதுபதி ரசிகர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர்.
விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி இணைந்து நடித்துள்ள "சிந்துபாத்" படத்தை தயாரித்த தயாரிப்பாளர், திரைத்துறை சார்ந்த வேறொரு தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தொகையை கொடுக்காமையினால் ஏற்பட்ட வியாபார முரண்பாடு காரணமாகவே "சிந்துபாத்" திரைப்படம் வெள்ளித்திரை காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தநிலையில், தற்போது இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கத்தினால், படத்தை எதிர்வரும் 28ம் திகதி திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் முழுமூச்சாக இறங்கியிருக்கின்றார்கள் படக்குழுவினர். ஆனாலும், குறித்த தினத்தில் "சிந்துபாத்" திரை காண்பது சந்தேகமே என்கின்றனர் விஷயம் அறிந்த தரப்பினர்.

எதிர்வரும் 28ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட சின்ன பட்ஜெட் படங்களான, நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கும் "தர்மபிரபு", மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான "ஹவுஸ் ஓனர்" உட்பட சில படங்கள் திரை காண்பதற்கு "சிந்துபாத்" திரைப்படம் இடையூறாக அமையலாம் என்று அந்தப் படங்கள் சார்ந்த குழுவினர் கருதுகின்றனர். காரணம், பெரிய பட்ஜெட் படமான "சிந்துபாத்" 28ம் திகதி வெளியானால் பெருமளவு திரையரங்குகள் இந்தப் படத்திற்காக ஒதுக்கப்படும். அதனால், ஏனைய படங்கள் பாதிக்கப்படும் என்பதே அவர்களது நியாயமான கவலை.

இந்த நிலையில், "ஹவுஸ் ஓனர்" பட இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் தனது இக்கட்டான சூழ்நிலை குறித்து பதிவிடுகையில், "பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். உங்கள் பட வெளியீட்டின் திகதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்" என்று குறிப்பிட்டு நடிகர் விஜய் சேதுபதியை உதவிக்கு அழைத்துள்ளார்.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top