தமிழ்த்திரையுலகில் ''தாமிரபரணி'' என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி, பல ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் நடிகை பானு.
இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்ப்புக் கிடைத்த போதிலும், அதன் பின்னர் பானு தமிழ்த் திரையுலகில் பெரிதாக மிளிரவில்லை. இதனை அடுத்து மலையாளத் திரையுலகிற்குள் நுழைந்த பானு, ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் தனது கியூட்டான மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பானு, தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.