Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
500 கோடி ரூபா செலவில் திருமணம் - சேர்ந்தன 4 தொன் குப்பைகள்

Sooriyan Gossip - 500 கோடி ரூபா செலவில் திருமணம் - சேர்ந்தன 4 தொன் குப்பைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,300 Views
இந்தியாவின் உத்தரகாண்டில், பிரபல தொழில் அதிபர்களான குப்தா நிறுவனத்தை சேர்ந்த குடும்பத்தினரின் திருமணங்கள் அண்மையில் நடைபெற்றது. இதன் காரணமாக இந்தத் திருமண நிகழ்வின் கழிவுகள் சுமார் 4 தொன் அளவு என்றும், அவற்றை அப்புறப்படுத்த கடும் சிரமம் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்தியாவை சேர்ந்த குப்தா குடும்பத்தின் நிறுவனங்கள், தென் ஆப்ரிக்காவில் மிக முக்கியமான நிறுவனங்களாக உள்ளன. இந்த குப்தா குடும்பத்தை சேர்ந்த இரண்டு திருமணங்கள் அண்மையில் நடந்தன. அவர்களில் ஒருவரான அஜய் குப்தாவின் மகன் சூரியகாந்தின் திருமணம் ஜூன் 18 முதல் 20ம் திகதி வரை உத்தரகாண்ட் மாநிலம் அவ்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடந்தது.
 
அதேபோன்று, அதுல் குப்தா என்பவரின் மகன் ஷாஜங்கிற்கு ஜூன் 20 முதல் 22 வரை, திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில், பல மாநில முதல்வர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அதிகளவிலான பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

அத்துடன் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களை அழைத்து வர ஹெலிகப்டர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.
திருமணத்திற்காக அருகில் இருந்த அனைத்து உணவகங்கள், விடுதிகளில் இருந்த அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. சுவிட்சர்லாந்தில் இருந்த மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த திருமணத்திற்காக இலங்கை பெறுமதிக்கு, சுமார் ரூ.500 கோடி செலவு செய்யப்பட்டது.

இந்நிலையில், திருமணம் முடிந்த பின்னர், தேவையற்றை பொருட்கள் மற்றும் கழிவுகள் என்பன அந்த இடத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

அதிகளவிலான குப்பைகள் காரணமாக, 20 பேர் கொண்ட குழுவை நகராட்சி அமைத்துள்ளது. அவர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குப்பைகளை அகற்றுவது பெரும் கஸ்ரமாக உள்ளதாக நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், எங்கள் மாடுகள், இங்குதான் மேயும். ஆனால், எல்லா இடத்திலும் பிளாஸ்டிக் பாக்கெட்கள் உள்ளன. எங்கள் மாடுகள், அந்த பிளாஸ்டிக்கை சாப்பிட்டு ஏதாவது நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பார்கள்? என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top