Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்போகும் கெளரவம் - பணம் பாகிஸ்தானுக்கா...? இந்தியாவிற்கா......???

Sooriyan Gossip - நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்போகும் கெளரவம் - பணம் பாகிஸ்தானுக்கா...? இந்தியாவிற்கா......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

539 Views
வெள்ளையர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் ஒரே நிலப்பகுதியாக இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன தனித்தனி நாடுகளாக பிரிந்த நாட்களில்  ஒரு சில குறுநில ஆட்சி அதிகாரம் கொண்ட சமஸ்தானங்களும்   இந்திய ஆட்சி அதிகார நிலப்பகுதிக்குள் காணப்பட்டன.
அந்தவகையில், இன்றைய ஹைதராபாத் பிரதேசம் அந்தக் காலப்பகுதியில் தனி சமஸ்தானமாக காணப்பட்டது. அதனை இந்தியாவின் குடியரசு ஆட்சி அதிகாரத்துக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, குறித்த சமஸ்தானத்தை தன்வசம் வைத்திருந்த நிஷாம் அதனை எதிர்த்தார். அவரது எதிர்ப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததுடன், ஆயுதங்களை கொடுத்து முரண்பாட்டுக்கு மேலும் வழியேற்படுத்தியது.

இந்தநிலையில், பாகிஸ்தான் கொடுத்த ஆயுத உதவிக்கு பிரதி உபகாரமாக, ஹைதராபாத் சமஸ்தானம் 10 லட்சத்து 800 பவுண்ஸ் பிரித்தானிய பணத்தொகையை, 1948ம் ஆண்டு காலப்பகுதியில் இங்கிலாந்தில் இருந்த பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிம் ரஹிம்தூலாவுக்கு அனுப்பிவைத்தது. குறித்த பணத்தொகையானது பாகிஸ்தான் தூதர் பெயரில் லண்டனில் உள்ள நெற்வெஸ்ட் வங்கியின் கணக்கொன்றில் வைப்புச்செய்யப்பட்டது.

ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய குடியரசு ஆட்சிக்குள் வந்த பின்னர், தாம் இங்கிலாந்திலுள்ள பாகிஸ்தான் தூதுவருக்கு அனுப்பிவைத்த பணத்தொகையை மீள தருமாறு ஹைதராபாத் சமஸ்தானத்தின் நிஷாம் வேண்டுகோள் விடுத்தபோதும், பாகிஸ்தான் நிஷாமின் வேண்டுகோளை மறுத்தது. இதனால், குறித்த பணத்தொகையின் உண்மையான உரிமையாளர் யார் என்ற தெளிவான ஆதாரம் கிடைத்தால் மட்டுமே, உரிய தரப்புக்கு பணம் மீளளிக்கப்படும் என்று வங்கி அறிவித்த நிலையில், தற்போதுவரை அந்தப் பணம் யாருக்கும் வழங்கப்படவில்லை.


இங்கிலாந்தின் வங்கியில் 10லட்சத்து 800பவுண்ஸ் பணம் அந்தக் காலத்தில் வைப்பிலிடப்பட்டபோதும், இப்போது 3கோடி 50 லட்சம் பவுண்ஸ் எனும் பெரும் தொகையாக, அதாவது இந்திய பண மதிப்பில் 315 கோடி ரூபாவாக வளர்ந்து நிற்கின்றது. இந்தப் பணத்தொகை தொடர்பில், லண்டன் நீதிமன்றம் ஒன்றில் தொடரப்பட்ட வழக்கு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டியாக நீண்ட பல வருடங்களாக இழுபட்டுவரும் நிலையில், ஹைதராபாத் சமஸ்தானம் நிஷாமின் வாரிசுகள், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து குறித்த வழக்கை தற்போதுவரை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன, தத்தமது நாடுகளின் கௌரவப் பிரச்சனையாகக் கருதும் இந்தப் பண விவகார வழக்கானது, இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதுடன், இன்னும் ஒரு சில வாரங்களில் நீதிமன்றத் தீர்ப்பு அறிக்கையை இரண்டு நாடுகளும் கையில் பெறப்போகின்றன. இதனால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் பண விவகாரம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top