Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
மரணித்த பின்னர், உடலினுள் நிகழப்போகும் பிரம்மிப்பான சம்பவங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SooriyanFM Gossip - மரணித்த பின்னர், உடலினுள் நிகழப்போகும் பிரம்மிப்பான சம்பவங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,747 Views
ஒவ்வொருவரும் மரணித்த பின்னர், இயற்கையான அழுகல், குறிப்பிட்ட சில பூச்சிகளின் வருகை, அந்த உடலைச் சுற்றியுள்ள சூழலில் ஏற்படும் மாற்றங்கள் என, பல பிரம்மிக்க வைக்கும் நிகழ்வுகள் அரங்கேறுவதாக, பிரபல மருத்துவர் எரின் கிம்மர்லே கூறுகின்றார். 

தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் தடய மானுடவியல் பிரிவின் இயக்குநராக இருந்து வரும் அவர், தனது குழுவுடன் இணைந்து சுற்றுச்சூழலுக்கு நடுவில், ஒரு உடல் எவ்வாறு அழுகுகிறது? என்பதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இதன்படி, ஓர் உடல் சிதைவுறும் போது பல்வேறு நிலைகளைக் கடக்கும் என்பதை மருத்துவர் எரின் கண்டுபிடித்தார்.

1.இதயத்துடிப்பு நின்றவுடனே, உடலில் ரத்த ஓட்டம் நிற்பதோடு, ஆங்காங்கே அவை தேங்க ஆரம்பிக்கும்.

2.உடலின் மிருதுவான திசுக்களை பக்டேரியா உட்கொள்ளத் தொடங்கியவுடன், கவனிக்கத்தக்க வகையில் உடலின் நிறம் மாறும். உடலில் வாயுக்கள் உருவாகத் தொடங்கி, உடல் பெருக்கத் தொடங்கும்.

3.மூன்றாவது கட்டத்தில் தான் மிகப்பெரிய எடைக்குறைவு நடைபெறும். உடலில் இருந்த மிருதுவான திசுக்கள் புழுக்களால் உட்கொள்ளப்பட்டோ, கரைந்தோ அது கிடத்தப்பட்டுள்ள சுற்றுச்சூழலோடு கலந்து விடும்.

4.இந்த கட்டத்தில், மிருதுவான திசுக்களெல்லாம் முடிந்து போனதால் புழுக்கள், பூச்சிகள் போன்றவை உடலை விட்டு சென்றுவிடும். இறந்தவரின் உடல் மண் மீது இருந்தால், அங்குள்ள பசுமையான விஷயங்கள் அழிவதோடு, அந்த மண்ணின் அமிலத்தன்மையில் மாற்றம் ஏற்படும்.

5.இறுதியாக உடலில் மிஞ்சி இருப்பது எலும்பு மட்டுமே. இதன் முதல் அடையாளம் என்பது முகம், கை மற்றும் பாதத்தில் தெரியவரும். காற்றில் ஈரப்பதம் இருந்தால், அதனாலும் மாற்றம் தெரியும். மேலும், இந்த உடலின் மூலமாக கிடைத்த சத்துகளால், அப்பகுதியில் செடிகள் நன்றாக விளைந்திருக்கும்.

இருப்பினும், இவை மட்டுமே முடிவு செய்யப்பட்ட நிலைகள் இல்லை என, மருத்துவர் எரின் மற்றும் அவரது குழுவினர் கூறுகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top